குளியாப்பிட்டியில் இடம்பெற்ற பாடசாலை வேன் விபத்தில் காயமடைந்த சிறுவர்களை பார்வையிட மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன இன்று வியாழக்கிழமை (28) குருநாகல் போதனா வைத்தியசாலைக்குச் சென்றார்.
குளியாப்பிட்டியில் உள்ள விலாபொல சந்திப்பில் உள்ள பல்லேவெல பாலத்தில் நேற்று புதன்கிழமை (27) காலை இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் மற்றும் சாரதி உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடமேற்கு மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் பிற அரச பிரதி அமைச்சருடன் வைத்தியசாலைக்கு உடன் சென்றிருந்தனர்.
காயமடைந்த சிறுவர்களின் நல்வாழ்வையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் சுதர்சன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

