முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். எனவே மிகுதி 400 மில்லியன் ரூபா எங்கே? என்ன நடந்தது? இந்த மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றை நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அன்ரனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் என் மீது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார். எனவே அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் என் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என இந்த ஊடக சந்திப்பு ஏற்படுத்தினேன்.
கிழக்கு மாகாணத்தில் தேசத்துக்கு மகுடம் என்ற திட்டத்தின் கீழ் யு.என்.டி.பி நிறுவனத்தால் மீனவர்களுக்காக 9 மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது. இருந்த போதும் தற்போது களுவங்கேணி, பாலமீன்மடு ஆகிய இரண்டு நிலையங்கள் மாத்திரம் இயங்கி வருகின்றது.
ஏனைய அனைத்து மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்கள் துருப்பிடித்து இயங்க முடியாது. பாலடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த கடற்தொழில் நீரியல் வளத்துறைக்கு சொந்தமான இந்த இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீனவர் சங்கங்களிடம் இருந்து நான் 5 வருட குத்தகை அடிப்படையில் சட்ட ரீதியாக பெற்றுக் கொண்டேன்.
அதேவேளை 2021 பாராளுமன்றத்தில் அப்போது கடல் தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் களுவங்கேணியில் மண்ணெண்னைய் நிரப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. இதை மீனவர்களுடைய பயனுக்காக திறக்கமுடியாதா என ஒரு கேள்வி இரா.சாணக்கியன் எழுப்பியிருந்தார். அது தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் அதை இயக்க யாரும் முன்வராததால் அதை கப்பல் போக்குவரத்து திணைக்களத்துக்கு வழங்கி அதை இயக்க வைக்குமாறு கூறியிருந்தார்.
இதனை ஊடகவாயிலாக அறிந்த நான், சம்மந்தப்பட்ட மீனவர் சங்கத்துடன் தொடர்பு கொண்டு அதனை திருத்தி அமைத்து இயக்குவேன் என கூறி 5 வருட குத்தகைக்கு பெற்றுக் கொண்டேன். அதில் தற்போது 4 வருடம் முடிவுற்றுள்ளதுடன் இன்னும் ஒருவருடம் இருக்கின்றது.
இந்த நிலையில் இரா.சாணக்கியன் டக்ளஸின் செல்வாக்கினால் எனக்கு வழங்கப்பட்டதாக பொய் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார்.
இரா.சாணக்கியனின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் கல்லாற்றில் தேசத்துக்கு மகுடத்தின் திட்டத்தில் வந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று வரை திறக்க முடியாது துருப்பிடித்து கட்டிடத்தின் கதவுகள் கழற்றப்பட்டு பாழடைந்துள்ளதை அவர் திறக்க வைத்திருக்கலாம் அதை செய்ய முடியாத இவர் தற்போது இயங்கி கொண்டிருக்கும் மீனவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

