ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர் மீது குற்றச்சாட்டு பதிவு

46 0

ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது வேண்டுமென்றே காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் 13ஆம் திகதி, ஜேர்மனியின் பவேரியா மாகாண தலைநகரான மியூனிக் நகரில், தொழிற்சங்க பேரணி ஒன்று நடந்துகொண்டிருந்த நிலையில், ஒருவர் வேண்டுமென்றே அந்தக் கூட்டத்தின் மீது வேகமாகக் காரைக் கொண்டு மோதினார்.

ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர் மீது குற்றச்சாட்டு பதிவு | Afghan Suspect Charged For Munich Car Crash

அந்த பயங்கர சம்பவத்தில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்றும், அதன் தாயாகிய 37 வயதுப் பெண்ணும் பலியானார்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் காயமடைந்தார்கள்.ஆப்கன் நாட்டவரான அந்த நபருடைய பெயர் Farhad N (24). புகலிடம் கோரி ஜேர்மனி வந்திருந்தார் அவர்.

அவர் கைது செய்யப்பட்டபோது, இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்காக, தான் ஜேர்மனியில் யாரையாவது கொல்ல கடமைப்பட்டுள்ளதாக தான் நம்புவதாகத் தெரிவித்திருந்தார் அவர்.

இந்நிலையில், நேற்று அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.