பிரான்ஸ் எதிர்கொள்ளும் 2.85 டிரில்லியன் பவுண்டுகள் கடன்… சரிவின் விளிம்பில் மேக்ரான் அரசாங்கம்

76 0

பிரான்ஸ் தற்போது 2.58 டிரில்லியன் பவுண்டுகள் கடனை எதிர்கொள்கிறது என்றும், விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பின் அவமானத்திற்கு தள்ளப்படலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது.

பிரான்சின் பொருளாதார அமைச்சர் எரிக் லோம்பார்ட், நாட்டைப் பிணை எடுக்க சர்வதேச நாணய நிதியம் கட்டாயப்படுத்தப்படும் ஆபத்து இருப்பதாக கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

பிரான்ஸ் எதிர்கொள்ளும் 2.85 டிரில்லியன் பவுண்டுகள் கடன்... சரிவின் விளிம்பில் மேக்ரான் அரசாங்கம் | France Faces Catastrophic Debt Explosion

 

பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கோரப் போவதாகக் கூறியதைத் தொடர்ந்து, பிரெஞ்சு அரசாங்கம் சில வாரங்களில் கவிழ்க்கப்படலாம் என்ற பரவலான கருத்துகளுக்கு மத்தியில் கடன் குறித்த இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதனிடையே, எதிர்க்கட்சிகள் மொத்தம் ஒன்று திரண்டு பிரதமர் பேய்ரூவின் பதவியைப் பறிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பேய்ரூவின் ஆட்சி கவிழ்ந்தால், நாடு 2.85 டிரில்லியன் பவுண்டுகள் கடனில் தத்தளிப்பதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீத பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நேரத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் முடியாத நெருக்கடிக்கு தள்ளப்படும்.

இந்த நிலையில், 1974 முதல் உபரி வருவாயை உருவாக்காத ஒரு பொருளாதாரத்தால் கடன் நெருக்கடி ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என்றே சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பிரெஞ்சு தலைமை பொருளாதார நிபுணர் Olivier Blanchard தெரிவித்துள்ளார்.

 

 

ஒரு காலத்தில் தன்னை பொருளாதாரத்தின் மொஸார்ட் என்று கூறிக்கொண்ட பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு, இந்த பொருளாதார நெருக்கடி பெரும் அவமானத்தை ஏற்படுத்தக் கூடும்.

பிரான்ஸ் எதிர்கொள்ளும் 2.85 டிரில்லியன் பவுண்டுகள் கடன்... சரிவின் விளிம்பில் மேக்ரான் அரசாங்கம் | France Faces Catastrophic Debt Explosion

 

இதனிடையே, சர்வதேச நாணய நிதியம் தலையிடும் நெருக்கடி இருப்பதை எச்சரித்த லோம்பார்ட், 1970களில் பிரித்தானியாவிற்கு ஏற்பட்ட நிலையை பிரான்ஸ் அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் சில மணி நேரங்களில், பிரெஞ்சு பொருளாதாரம் உறுதியாக உள்ளது என்றும் கடனை சிரமமின்றி செலுத்த முடியும் என்றும் எரிக் லோம்பார்ட் வலியுறுத்தியுள்ளார்.