நாளாந்த செயற்பாடுகளை செய்யாததால் ரணிலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது

47 0

ரணில் விக்கிரமசிங்க தனது உடல் ஆரோக்கியத்தை நாளாந்தம் முறையாக முகாமைத்துவம் செய்துவரக்கூடியவராக இருந்துள்ளார். என்றாலும் அவர் கைது செய்யப்பட்ட தினம், அவரது நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாலே அவர் நோய்க்குள்ளானாரென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தல் புதன்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கடந்த வாரம் இலங்கை வரலாற்றில் இருண்ட காலமாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். குறிப்பாக, சர்வதேச ஜனநாயகக் கூட்டணி தனது எக்ஸ் தளத்தில், ஒரு காலத்தில் எமது கூட்டணியின் துணைத் தலைவராக பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச ஜனநாயகக் கூட்டணி தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறது.

கைது செய்யப்பட்டதிலிருந்து முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை வேகமாக மோசமடைந்துள்ளது. எனவே, அவர் முறையான மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெறும் வகையில், அவரை தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்திருந்தது.

அதேநேரம் ரணில் விக்கிரமசிங்கேவின் மருத்துவ நிலைமைகள் குறித்து சமூக ஊடகங்களில் பலர் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்துவதையும் நான் கண்டேன்.

அவர் தனது வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட போக்கில் முகாமைத்துவம் செய்துவந்தார் என்றே நினைக்கிறேன், அது சில உடற்பயிற்சிகள் மூலம், சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் இருக்கலாம்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவு, நீதிமன்றம் என சுமார் 12 மணி நேரம் அவருக்கு பாரியளவில் அழுத்தம் கொடுத்து அவரின் உடல் நிலையை பாதிக்கச்செய்திருக்கிறது.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்துவதற்கு அழைத்துச்செல்லப்பட்டிருப்பதும் அவரது பரம்பரைக்கு உரித்தான அல்லது அவரது பாட்டிக்கு உரித்தாகி இருந்த 43ஏக்கர் கொண்ட வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்காகும். அதனால் இந்த சம்பவத்தை அத்தகைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவருக்கு நடந்த மிகவும் துயரமான நடத்தையாகவே நான் பார்க்கிறேன்.

உண்மையில், இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து சக்திகளும், முழு சட்ட சமூகமும், அனைத்து மருத்துவக் குழுக்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நின்றன.

அத்துடன் வைத்தியர்கள் பலர் விடுமுறை பெற்றுக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவுக்கவின் பிணை மனுவில் கைச்சாத்திட காத்திருந்தனர். எனவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீதி கிடைப்பதற்கு அர்ப்பணித்த முழு இலங்கை மக்களுக்கும் எமது கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.