இலங்கை சட்ட ஆணைக்குழுவுக்கு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நியமனம்

43 0

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு கீழ் இருக்கும் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான  நியமனம் வழங்கும் நிகழ்வு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இலங்கை சட்ட ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதிபதி ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர நியமிக்கப்பட்டதுடன் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நீதிபதி எம்.ஆர்.சி. பெர்னாண்டோ, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பீ,ஐ.எஸ்.தேமுனித சில்வா, எப்.ஜமீல், நீல்  டீ.பி.உனும்புவே,எச்.யூ.பெர்னாண்டோ, விரான் குரே,  சட்டத்தரணி ஜீ.எஸ்.ஏ.சான்த்தடி சில்வா, பேராசிரியர் சுனில் டீ.பி. அபேரத்ன,  பி.ஐ.எஸ்.சமரசிங்க, ஆர்.அமீன் மற்றும் பேராசிரியர் டபிள்யூ. செனவிரத்ன ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

1969ஆம் ஆண்டு 3ஆம் இலக்க சட்ட ஆணைக்குழு சட்டத்தின் 2ஆம் உறுப்புரைக்கு அமைய 1969ஆம் ஆண்டு இலங்கை சட்ட ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதுடன் ஜனாதிபதியால் 5வருட காலத்துக்கு இலங்கை சட்ட ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.