மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளதுடன், அந்தச் செய்திகள் “ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தொலைநோக்கு மற்றும் கொள்கைகளுக்கு தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“எந்த ஒரு தயக்கமும் இன்றி, நமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் நான் என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்” என்று தெரிவித்த ஆளுநர், அரசாங்கத்தின் முயற்சிகளுடன் தான் உறுதியாக இணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

