2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீ ரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவி வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீ ரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான ஐதராபாத்தைச் சேர்ந்த அவர் பாராட்டு, பரிசு மழையில் நனைந்தார்.பி.வி.சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு ஏற்கனவே ரூ.3 கோடி பரிசு தொகையும், தலைநகர் அமராவதியல் 1000 சதுர அடி வீடும் வழங்கி இருந்தது. இதற்கிடையே 22 வயதான பி.வி.சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவியும் வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு தேவையான சட்ட திருத்த மசோதா ஜி.எஸ். டி.க்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது.இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்த பிறகு பி.வி.சிந்து துணை கலெகடராக நியமிக்கப்படுவார். விரைவில் அவர் துணை கலெக்டராக நியமிக்கப்படுவார். தற்போது அவர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் துணை மேலாளராக பணியாற்ற வருகிறார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

