மக்கள் போராட்ட இயக்கமானது கண்டி நகரில் ஆரம்பித்து கொழும்பு வரையான சகல நகரங்களிலும் அரசியல் ரீதியாக பொதுமக்களை விழிப்பூட்டும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடைபெறும் இவ் ஆர்ப்பாட்டத்தில் முதலாவது ஆர்ப்பாட்டம் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் 300 – 500 ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டி நகர வீதிகளில் ஊர்வமாகச் சென்றனர். மேற்படி எதிர்ப்பு ஊரவலத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போதைய அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கும் சுலோகங்களை ஏந்தி இருந்தனர்.
துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். ஊர்வலம் இடம்பெற்ற வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பேரணி அமைதியாக இடம் பெற்றதையும் அவதானிக்க முடிந்தது.



