முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரம சிங்க அவர்களது கைதையடுத்து சகல எதிரணி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்ததன் மூலம் அவர்கள் அனைவரும் ஒரே கொள்ளை உடையவர்கள், நண்பர்கள் என்பதை நாட்டு மக்களுக்கு காட்டியுள்ளனர் என ஜன அரகல சங்விதான(மக்கள் போராட்ட அமைப்பு) வின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
மக்கள் போராட்ட அமைப்பின் பேரணி ஒன்றை கண்டியில் ஆரம்பித்து வைத்தபின்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கயைில்,
ரணில் விக்கிரமசிங்க அவர்களை சரியாகவும் பிழையாகவும் விமர்சித்தவர்கள் எல்லலோரும் அவருடன் இணைந்தததை காண முடிந்தது. இதன் மூலம் அவர்கள் அனைவரும் ஒத்த தன்மையுடையவர்கள், நண்பர்கள் என்பதையே காட்டினர். ரனில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததில் தவறு இல்லை. அது எடுக்க வேண்டிய விடயம். ஆனால் ஒரு சாதாரண விடயத்திற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை விட கடுமையான பல விடயங்கள் உள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்கு தலைத் தடுக்காமை, மத்திய வங்கி நிதி மோசடி வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் என்று எல்லாம் அரசியல் அரங்கில் பேசப்பட்டன. இவை மனைவியுடன் வெளிநாடு சென்றதாக்க் கூறப்படும் விடயத்தை விட கடுமையான விடயங்களாகும் என்றார்.

