ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதால் இவர்கள் பாதிக்கப்படலாம்: சுவிஸ் ஆய்வு

67 0

 ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வது, புலம்பெயர்ந்தோர், பெண்கள் மற்றும் நிலைத்தன்மை இல்லாத வேலை செய்வோரை பாதிக்கும் என சுவிஸ் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அதாவது, ஞாயிற்றுக்கிழமை வேலை செய்யும் நிலையில் அதிகம் இருப்பவர்கள் இவர்கள்தானாம்.

ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதால்…

ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வது நல்வாழ்வை பாதிக்கும் என்கிறது Bern பல்கலை ஆய்வொன்று.

குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்கிறது அந்த ஆய்வு.

ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதால் இவர்கள் பாதிக்கப்படலாம்: சுவிஸ் ஆய்வு முடிவுகள் | Swiss Study Say Workin On Sunday Affect Well Being

ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வது உடல், மனம் மற்றும் சமூக நலனை பாதிக்கும். தற்போதைய சுழலில் சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வது, புலம்பெயர்ந்தோர், பெண்கள் மற்றும் நிலைத்தன்மை இல்லாத வேலை செய்வோர் ஆகியோர்தான் அதிகம்.

அத்துடன், ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதில் 17.3 சதவிகிதம் பெண்கள், 14 சதவிகிதம் ஆண்கள். மருத்துவத் துறை, விருந்தோம்பல் துறை மற்றும் சேல்ஸ் போன்ற துறையினர்தான் அதிக அளவில் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வது, தூக்கம் பாதிப்புக்குள்ளாவது, இதயப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும் என்றும், அது வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்வது, குடும்ப கூடுகை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளைக் காணச் செல்வது போன்ற விடயங்களுக்கும் தடையாக இருக்கும் என்கிறது ஆய்வு.

விடயம் என்னவென்றால், ஆண்டொன்றிற்கு 9 முதல் 12 ஞாயிற்றுக்கிழமைகள் வேலை செய்யும் வகையில் சட்ட மாற்றங்கள் செய்ய சில சுவிஸ் மாகாணங்கள் திட்டமிட்டுவருகின்றன.

இத்தகைய சூழலில்தான் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து Bern பல்கலை ஆய்வு தெரிவித்துள்ள விடயங்களை, வர்த்தக யூனியன்கள், மத அமைப்புகள், மருத்துவத்துறையில் பணியாற்றுவோரின் நலனுக்காக செயல்படும் Swiss Society for Occupational Medicine என்னும் அமைப்பு ஆகியோரைக் கொண்ட Alliance for Sunday என்னும் அமைப்பு நேற்று முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.