ஜேர்மனியில் முதல்முறையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த கப்பல் மறுசுழற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது Emden நகரில் உள்ள EWD Benli Recycling நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மையம், கடலில் பயணிக்கும் கப்பல்கள், உள்நாட்டு நீர்வழிக கப்பல்கள், பயணிகள் கப்பல்கள், Ferry படகுகள், கடலோர காற்றாலை உதிரி பாகங்கள் மற்றும் தொழிற்சாலை உதிரி பாகங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக களைந்து மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டது.
இந்த மையம் Oldenburg மாநில வர்த்தக கண்காணிப்பு அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளது. Emden துறைமுகம் வழியாக வரும் அனைத்து கப்பல்களையும் இந்த மையம் களைந்து மறுசுழற்சி செய்யும்.

இந்த மறுசுழற்சி மையம், ஜேர்மனியின் எதிர்கால திட்டமிடலுக்கு முக்கியமானது என Lower Saxony மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால், பழைய கப்பல்களை தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பவேண்டிய அவசியம் இல்லாமல், உள்நாட்டிலேயே பாதுகாப்பாக மறுசுழற்சி செய்ய முடியும்.
இதற்கு முன், பழைய கப்பல்கள் மோசமான சூழ்நிலைகளில் தெற்காசிய நாடுகளில் களைந்து, சுற்றுசூழலுக்கு மக்களின் உடல்நடத்திற்கும் தீங்கு விளைவித்தன.

