இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு சீனா கண்டனம்

57 0

சுதந்திர வர்த்தகத்தின் முழுப் பலன்களையும் அமெரிக்கா அறுவடை செய்து வருவதாகவும் இப்போது வரிகளை மிரட்டும் கருவியாக பயன்படுத்துவதாகவும் இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் மேலும் தெரிவிக்கையில்,

மௌனம், அச்சுறுத்துபவர்களை மேலும் வலிமையாக்குகிறது. சீனா எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும். சீன சந்தையில் அதிகமான இந்திய பொருட்கள் வரவேற்கப்படுகின்றன.

மின்னணு உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானத்தில் சீனா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்தியா-சீனா சந்தைகள் ஒன்றிணைந்தால், அது பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். சீனாவில் மேலும் பல இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சீன நிறுவனங்களுக்கு இந்தியாவும் இதேபோன்ற சலுகையை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று சீனத் தூதர் மேலும் தெரிவித்துள்ளார்.