அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (25) காலை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியர்களின் இடமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 08.00 மணி முதல் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

