ஜேர்மனி, உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் விவகாரம் தொடர்பில், உள்நாட்டிலேயே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் விவகாரம்
ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படும் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனைப் பாதுகாக்க ஐரோப்பிய அமைதி காக்கும் படைகளை அனுப்புவது தொடர்பில் ஜேர்மனியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸைப் பொருத்தவரை, உக்ரைனுக்கு படைகளை அனுப்புவதை அவர் ஆதரிக்கிறார். என்றாலும், அதற்கு தனது ஐரோப்பிய கூட்டாளர்களின் ஆதரவும், தனது சொந்த கூட்டணியின் ஆதரவும் தேவை என்பதையும் அவர் மறுக்கவில்லை.

ஜேர்மனியில் வளர்ந்துவரும் வலதுசாரிக் கட்சியான AfD கட்சியின் தலைவரான Alice Weidel, உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் மெர்ஸின் திட்டம் அபாயகரமானதும் பொறுப்பற்றதும் என்று கூறியுள்ளார். மெர்ஸ் அரசில் வெளியுறவு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் Johann Wadephulம், உக்ரைனுக்கு படைகளை அனுப்புவது ஜேர்மனிக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ, உக்ரைனுக்கு படைகளை அனுப்புவதன் மூலம் ஜேர்மனி அணு ஆயுத வல்லரசு ஒன்றுடன் மோதும் நிலைக்கு ஆளாகலாம் என்னும் கவலை ஏற்பட்டுள்ளது.
ஆக, ஜேர்மனி, உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் விவகாரம் தொடர்பில், ஜேர்மன் அரசியல் வட்டாரத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

