தெமட்டகொடையில் ரயில் ஒன்று தவறான பாதையில் சென்றதால் ரயில் சேவைகள் தாமதம்

48 0

தெமட்டகொட ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று தவறான பாதையில் சென்றதால் ஏற்பட்ட இடையூறினால், மருதானை – கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன.

21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு மருதானையிலிருந்து காலிக்கு புறப்படவிருந்த கடுகதி இரவு தபால் ரயிலும் தாமதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த இடையூறு காரணமாக, மேல் மற்றும் கீழ் திசைகளில் இயங்கும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயங்கும் என இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.