யேர்மன் பாராளுமன்ற உறுப்பினரான Sascha H. Wagner அவர்களுடன் தமிழ் இளையோர் அமைப்பு சந்திப்பு.

219 0

21 ஆவணி 2025 இன்று, யேர்மன் பாராளுமன்ற உறுப்பினரான இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த Sascha H. Wagner அவர்களுடன் தமிழ் இளையோர் அமைப்பு Oberhausen நகரில் சந்திப்பு ஒன்றை நடத்தி, அவருக்கு சில விடயங்களை எடுத்துரைத்துள்ளனர்.

இலங்கையின் வடக்கேயுள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் மறுக்கப்பட்ட அகழ்வாராச்சி, மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள், அப்பாவி மக்கள் மீதான கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் நிலை சம்பந்தமான அனைத்து விடயங்களுக்கும் சர்வதேச விசாரணை வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

தமிழ் மக்களுக்கு ஏற்படும் அநீதிகள் சம்பந்தமாகவும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் சம்பந்தமாகவும் யேர்மன் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துமாறு அவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

யேர்மன் அரசு இலங்கை ஜனாதிபதியைச் செங்கம்பளம் விரித்து அழைத்தது தொடர்பான புலம்பெயர் தமிழ் மக்களின் அதிதிருப்தியையும் ஏமாற்றத்தையும் அவரிடம் தெரிவித்ததோடு அதற்கு பாராளுமன்றத்தில் குரல் கொடுக்குமாறும் கேட்கப்பட்டது.