குழாய் ஒன்றில் ஹெரோயின் கடத்திய நபர் கைது

51 0
பயாகல பகுதியில் குழாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் ஒருவரை களுத்துறை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மற்றொரு நபருக்கு ஹெரோயினை வழங்குவதற்காக குழாயில் மறைத்து எடுத்துச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 20 மில்லியன் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் குடா பயாகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபராவார்.
குறித்த குழாயை ஆய்வு செய்தபோது, அதில் 1 கிலோகிராம் 175 கிராம் ஹெரோயின் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடல் வழியாக படகுகள் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த போதைப்பொருள் மொத்தமாக விநியோகிக்கப்பட்டதாக சந்தேக நபரின் வாக்குமூலத்தில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.