பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட சந்தேக நபர்கள் அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகஸ்கடவல பகுதியில் புதையல் பெறும் நோக்கில் முன்னெடுத்த அகழ்வு குறித்து அவசர அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்ததாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
அகழ்வு முன்னெடுக்கப்பட்ட கோவிலுக்கு அருகில் உள்ள கல் சுவரைக் கொண்ட தொல்பொருள் பெறுமதிமிக்க நிலம், தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான நிலமா என்பதை ஆராய்ந்து, அது தொடர்பான தொல்பொருள் அறிக்கையை தாமதமின்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

