பணச்சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டமூலம் நிறைவேற்றம்

43 0

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று (19) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கையில் பந்தயம் கட்டுதல் மற்றும் பணச்சூதாட்ட நிறுவனங்களை தரநிலைப்படுத்தல், சமூகத் தீங்குகளைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல் மற்றும் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்தல் தொடர்பில் விரிவான அல்லது முழுமையான விடயப்பொறுப்பைக் கொண்ட சுயாதீனமான ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகார சபையை ஸ்தாபிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு அண்மையில் அரசாங்க நிதி பற்றிய குழுவும் அனுமதி வழங்கியிருந்தது.