கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக S&P SL20 குறியீடு இன்று (19) 6,000 புள்ளிகளைக் கடந்ததுள்ளது.
அதன்படி, இன்றைய வர்த்தக நாள் நிறைவில், S&P SL20 குறியீடு 58.46 புள்ளிகள் அதிகரித்து 6,055.92 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இது 0.97% வளர்ச்சியாக காணப்பட்டுள்ளதுடன், இதில் இலங்கையின் மிகப்பெரிய சந்தை மூலதனவாக்கம், திரவத்தன்மை வாய்ந்த பங்குகள் மற்றும் சிறந்த நிதியியல் நிலமையை கொண்ட 20 நிறுவனங்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டென் 20,571.07 புள்ளிகளாக உயர்வடைந்துள்ளது.
பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வானது 10.8 பில்லியனுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

