உலகை சுற்றிவரும் இளைய துணை விமானியாக வரலாற்று சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுப்படும் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதுடைய பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார்.
சனிக்கிழமை (17) கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை (CIAR) வந்தடைந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பைரன் 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்வதாக தெரியவருகின்றது.






