பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகேவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே இளன்றைய தினம் காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே பல இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

