பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஊடகவியலாளர் குமணன் ஆஜராகினார்

65 0

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட  முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன்  முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக சென்றுள்ளார்

ஊடகவியலாளர் குமணனின் வீட்டுக்கு  க  2025.08.07 அன்று சென்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர்,  அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு 2025.08.17 அன்று வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்