லொஹான் ரத்வத்தவின் மரணம் முழு நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு -மஹிந்த ராஜபக்ஷ

58 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் மரணம் கண்டி பிரதேசத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லொஹான் ரத்வத்த உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (15) காலமானார்.

லொஹான் ரத்வத்தவின் சடலத்தை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை (15) சென்றுள்ளனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 17 ஆம் திகதி கண்டியில் உள்ள நித்தவெல மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.