அத்துடன் குறித்த குண்டை கண்டுபிடித்தவர்கள் 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டுடை பார்வையிட்டதுடன் குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்கம் செய்வதற்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கட்டளையை பெற்று மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

