களுத்துறையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

49 0

களுத்துறையில் ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் களுத்துறை மற்றும் கல்பாத பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 6,800 மில்லி கிராம் ஐஸ், 60 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 600 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.