தமிழர் வாழ்விற்கான உண்மை போராட்டம், தனிப்பட்ட சுய லாப போராட்டங்களை புறக்கணிக்க வேண்டும்

96 0

தமிழர் வாழ்விற்கான உண்மை போராட்டம் தனிப்பட்ட சுய லாப போராட்டங்களை புறக்கணிக்க வேண்டும் – வணிக நிறுவனங்கள் திங்கட்கிழமை 100ம% இயங்கும்’
தமிழர் வாழ்விற்கான போராட்டம் உண்மையில் அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சிலர் தனிப்பட்ட அரசியல்இ வியாபார மற்றும் சுய லாபத்திற்காக போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்; இதுபோன்ற முயற்சிகளை மக்கள் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

யாழ்ப்பாண வணிகர் சங்கம் ஒரு கட்சியின் ஹர்த்தால் அறிவிப்பை ஏற்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. அதேபோல் வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (18.08.2025) வழமையான போல் செயல்படும் என வவுனியா வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

சுமந்திரன் தமிழர்களுக்காக அறிவிக்கும் போராட்டம் உண்மையில் பயனுள்ளதாக இருக்காது. அவர் தமிழ அரசியலில் இருந்து ஒதுங்குவதே சரியான உதவி என்றும் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்புக்கு எதிராக போராட அறிவிப்பதோ அல்லது ஏக்கிய இராஜியவினை ஆதரிப்பதோ மூலம் சிங்கள அரசுப் பயங்கரவாத சூழ்நிலைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாரத்தினை பெற்றுக் கொள்ளாமல் போராட்டம் அறிவிப்பது எந்த பயனும் இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

திங்கட்கிழமைஇ தமிழர் தாயகம் வழமையான போல 100ம% இயங்கும் என வணிக சங்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.