இந்திய சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரான்ஸ், சுவாரஸ்ய காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ஒரு சுவாரஸ்ய காணொளி

சமூக ஊடகமான எக்ஸில், இந்தியாவிலிருக்கும் பிரான்ஸ் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தூதரகம் தெரிவித்துக்கொண்டுள்ளது.
அத்துடன், தூதரகத்தில் பணிபுரிவோரிடம் அவர்களுக்கு இந்தியாவில் என்னென்ன பிடிக்கும் என்பதை பிரான்ஸ் நாட்டு தூதரக ஊழியர் ஒருவர் கேட்பதைக் காட்டும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான நட்பின் முக்கியத்துவம் குறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் கருத்து தெரிவிக்க, இந்தியாவில் எனக்கு சிக்கன் பிரியாணிதான் அதிகம் பிடிக்கும் என்கிறார் ஒரு ஊழியர்.
பெண் ஊழியர் ஒருவர் இந்திய உடைகளில் எனக்கு சேலை பிடிக்கும் என்று கூற, ஒருவர் எனக்கு இந்தியாவின் கொல்கத்தா நகரம் பிடிக்கும் என்கிறார்.
மற்றொருவர் எனக்கு மசாலா தேநீர் பிடிக்கும் என்று கூற, எனக்கு இந்திய எழுத்தாளர்களில் ரபீந்திரநாத் தாகூரைப் பிடிக்கும் என்கிறார் ஒருவர்.
இன்று அதிகாலை வெளியிடப்பட்ட அந்த வீடியோவைப் பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது!

