வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற MI-17 ஹெலிகொப்டர் வெள்ளிக்கிழமை (15) விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இரு விமானிகள் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
வடக்கு பாகிஸ்தானில் கடுமையான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கிச் செல்லும் போதே இந்த ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், மோசமான வானிலைதான் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

