சுற்றுலாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்கள் எடுக்கப்பட மாட்டாது – வலு சக்தி அமைச்சர் உறுதி

63 0

அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் உரிமைகளுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு தீர்மானத்தையும் எடுக்க மாட்டோம். அந்த வகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆலோசனைக்கமைய மன்னார் கற்றாலை மின் உற்பத்தி திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில்  வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

காற்றாலை மின் திட்டத்துக்கு பொருத்தமான இடம் என்பதாலேயே மன்னார் மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மன்னாரிலும் அதன் தீவுப் பகுதிகளிலும் ஒப்பந்தங்களுக்கு அமைய இவ்வாறான மின் உற்பத்தி திட்டங்கள் காலம் காலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கமைய அங்கு இரு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்று 20 மெகாவோல்ட் வேலைத் திட்டமாகும். மேலும் 50 மெகாவோல்ட் திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இவற்றுக்கு முன்னர் 250 மெகாவோல்ட் மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது. அதானி நிறுவனத்துடன் இந்த வேலை திட்டத்துக்கான உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் தற்போது இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் ஆயிரம் மெகாவாட் வரை மின் உற்பத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான இயலுமை காணப்படுகிறது. கடற் பகுதிகள் அல்லாமல் நிலப்பரப்புகளில் மாத்திரம் ஆயிரம் மெகாவோல்ட் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். இங்கு முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் அபிவிருத்திகளை அடிப்படையாகக் கொண்டே இடம் பெறுகின்றன.

20 மெகாவோல்ட் மின் உற்பத்தி வேலை திட்டத்துக்கான பொருட்கள் போக்குவரத்து தொடர்பிலேயே எதிர்ப்புகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் அப்பிரதேச மத தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய தரப்பினருடனும் கடந்த வாரம் ஜனாதிபதியுடனும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே ஒரு மாத காலத்துக்கு அந்த திட்டம் பிட் போடப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் உரிமைகளுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு தீர்மானத்தையும் எடுக்க மாட்டோம் என உறுதியாக குறிப்பிடுகின்றேன் என்றார்.