நிலையான கொள்கையை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை

57 0

சர்வதேச மாணிக்கக்கல் மற்றும் ஆபரண சந்தையை வெற்றிக் கொள்ளும் வகையில் நிலையான கொள்கை ஒன்றை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

“Gem City Ratnapura- 2025 எனும் தொணிப்பொருளில் நடைபெறும் மாணிக்கக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி – 2025 இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணத்துறையின் முதலாவது அரச இணையத்தளமான www.gemcityratnapura.com இணையத்தளத்தில் GOV PAY வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இங்கு பிரதமர் மேலும் கருத்து வௌியிடுகையில்,

இலங்கையின் மாணிக்கக் கற்கள் உலக பிரசித்தமானவையாகும். அவற்றில் பெரும்பாலானவை இரத்தினபுரியிலேயே கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இரத்தினபுரிக்கு அதற்கான கௌரவம் கிடைத்துள்ளதா? என்பது கேள்விக்குறியாகும். உயர்தர மாணிக்க கற்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு இரத்தினபுரி மாவட்டம் பாரிய பங்களிப்பை வழங்குகின்றது.இருப்பினும் இந்த துறையில் உள்நாட்டு ஏற்றுமதி வருவாய்க்கான அதிகபட்ச திறனை நாம் இன்னும் எட்டவில்லை. பொருத்தமல்லாத கொள்கைகள் இந்த துறையின் அபிவிருத்தியை பாதிப்படைய செய்துள்ளன. எனினும் இதற்கு நிலையான கொள்கை ஒன்றை வகுப்பதற்கு எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.