முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அழைப்பு..
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்சவை, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தற்போது அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.
அதேவேளை, அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

