சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஏரி ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த இரண்டு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.
விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்
செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள Vevey என்னுமிடத்தில் ஏரி ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியது.
விமானத்தில் பயணித்த இரண்டு பேரும் படகு ஒன்றின் உதவியுடன் மீட்கப்பட்ட நிலையில், விமானம் ஏரியில் மூழ்கிவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

