பிரான்ஸ் அரசு வழங்கும் Passeport Talent விசா திட்டம், திறமையான தொழிலார்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான ஒரு நவீன குடியுரிமை பாதையை உருவாக்கியுள்ளது.
Passeport Talent (Talent Passport Visa) ஒரு வகையில் பிரான்சின் Golden Visa போன்றது.
இது வேகமான அனுமதி, நெகிழ்வான குடியிருப்பு விதிகள் மற்றும் பிரென்ச் குடியுரிமையை நோக்கி செல்லும் தெளிவான வழியை வழங்குகிறது.
இத்திட்டம் CESEDA சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த விசா விண்ணப்பித்தார்களுக்கு பிரான்சில் உருவாக்கப்படும் வருமானத்திற்கு மட்டுமே வரி விதிக்கப்படும்.மேலும், இத்திட்டத்தின் கீழ் வதிவிட உரிமத்தை பெறவோ புதுப்பிக்கவோ மொழி தேர்வு கட்டாயமில்லை.
இந்த விசா, வீட்டு வாடகை ஒப்பந்தம், மின்சார பில்கள் அல்லது வணிக பங்குகள் போன்ற பிரான்சுடனான தொடர்பை நிரூபிக்க பயன்படுகின்றது.
இது அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் திட்டம் என்பதால் நீண்டகால பாதுகாப்பை வழங்குகிறது.
இத்திட்டத்தில், குறைந்தபட்சம் 300,000 யூரோவை பிரெஞ்சு நிறுவனத்தில் முதலீடு செய்யவேண்டும்.
வதிவிட அனுமதி கிடைத்தபிறகு முதலீடு செய்யப்படுவதால் இது முன்கூட்டியே ஆபத்தை குறைக்கிறது.
நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் பிரெஞ்சு SPV மூலம் பங்குகளை வைத்திருப்பதால், நீங்கள் நிறுவனத்தை நேரடியாக நிர்வகிக்க வேண்டிய அவசியமில்லை.இத்திட்டத்தில் வருடாந்திர வட்டி, மூலதன காப்பீடு போன்றவை இருப்பதால், 5 ஆண்டுகளில் முழு முதலீடும் திரும்ப கிடைத்துவிடும்.
இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் குடியிருப்பு அட்டை வழங்கப்படும். அதனை 10 ஆண்டுகளுக்குப் புதுப்பித்துக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் 5 ஆண்டுகளுக்குப்பிறகு குடியுரிமை பெறும் வாய்ப்பும் உள்ளது.

