தமிழர்களை படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள்

81 0

தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் நேற்றாகும்.

வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.

1945ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டுவரை தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது.

1945ஆம் ஆண்டு இந்த கிராமம் இரத்தக் களறியாக்கப்பட்டது. வாள் வெட்டுக்கும் கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டிய மல்லிகைத்தீவு மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர்.

தமிழர்களை படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் | Memorial Day Of The Veeramunai Massacre

 

1945ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர்.

கொண்டவெட்டுவான் இரானுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிடவேண்டுமென்ற திடமான முடிவுடன் செயற்பட்டனர்.

1990ஆம் ஆண்டு ஆனி மாதமும் ஆடி மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ காலடிவைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது.

ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதையறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர். ஆலயத்தில் வைத்தே கொல்வதற்குரியவர்களை தெரிவு செய்தார்கள். முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர்.

 

 

தமிழர்களை படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் | Memorial Day Of The Veeramunai Massacre

29ஆம் திகதி மீண்டும் கைது. மீதமிருந்த ஆண்களில் ஐம்பத்தியாறு பேரை துப்பாக்கிமுனையில் தள்ளிச்சென்றார்கள். கொண்டை வெட்டு வானில் பெரு நெருப்பெரிந்தது. சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள். சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைத்தீவிற்குத் தப்பியோடினார்கள்.

 

 

 

 

 

 

 

 

காரைத்தீவுப் பாடசாலை அகதிமுகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதியாக்கப்பட்டார்கள். அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. அகதிமுகாமையும் கொலை முகாமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள். தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக்கூடமாக்கப்பட்டது.

தமிழர்களை படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள் | Memorial Day Of The Veeramunai Massacre

ஆட்டுப்பண்ணைகளில் இறைச்சிக்குத் தெரிவாகிய கிடாப்போல அகதிமுகாமில் வைத்துக் கொலை செய்வதற்குரிய ஆண்களை தெரிந்தெடுத்தார்கள். இம்முறை காரைத்தீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசையினைக் காட்டினார்கள்.

ஒரு மாதங்கூட மறையவில்லை. ஆடிமாதம் 4ஆம் திகதி காரைதீவு அகதிமுகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery