சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இருவர் பலி!

83 0

உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவில் உள்ள அம்ப கஹ சந்திக்கு அருகிலுள்ள வயலில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் உரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக மின்சார கம்பிகளை பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில், இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.