இலங்கை பொலிஸார் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை உடனடியாக கைவிடவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை, இலங்கை பொலிஸார் உடனடியாக கைவிடவேண்டும், தங்கள் துன்புறுத்தல்களை நிறுத்தவேண்டும்,பத்திரிகையாளர்கள் பழிவாங்கப்படுதல் குறித்த அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்றுவதை உறுதி செய்யவேண்டும் என சிபிஜேயின் பிராந்திய இயக்குநர் பெஹ் லிஹ் யி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நியாயபூர்வமான செய்தியறிக்கையிடலிற்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை பயன்படுத்துவது பொலிஸ் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதாகும்,அச்சு ஊடக சுதந்திரத்தை மீறுவதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

