ஹொரணை நகர சபை அமர்வு 14 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இதற்குக் காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 1 ஆம் திகதி, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு நகர சபை உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அதன்படி, வெற்றிடமாக உள்ள பதவிக்கு தேர்தல் ஆணைக்குழு புதிய உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளது.
இன்று (12) நடைபெற்ற அமர்வில் புதிய உறுப்பினரும் ராஜினாமா செய்த உறுப்பினரும் கலந்துகொண்டனர்.
அப்போது, ராஜினாமா செய்த உறுப்பினர் தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற்று மீண்டும் பதவியில் அமர வேண்டும் எனக் கோரினார்.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நகர சபைத் தலைவர் அமர்வை 14 நாட்களுக்கு ஒத்திவைத்தார்.

