கற்பிட்டி பொலிஸ் பிரிவின், திகலி – எத்தாலை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, பீடி இலைகள், போதை மாத்திரைகள் சிகரெட்டுகள் மற்றும் பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் எத்தாலை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதன்போது, 379 கிலோ பீடி இலைகள், 281,200 போதை மாத்திரைகள், 6,000 சிகரெட்டுகள் (30 கார்டூன்கள்) மற்றும் கடல் வழியாக நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

