பிரதிபாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பது தாமதம்

52 0

சபாநாயகர் ஜகத்விக்கிரமரட்ண கொழும்பில் இல்லாததால் பிரதிபாதுகாப்பு அமைச்சர்  அருண ஜயசேகரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிப்பது தாமதமாகியுள்ளது என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உத்தியோகபூர்வ பணியொன்றிற்காக சபாநாயகர் கொழும்பிற்கு வெளியே உள்ளார் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற வட்டாரங்கள் இதன் காரணமாக நம்பிக்கையில்லாத தீர்மானம் தாமதமாகியுள்ளது என தெரிவித்துள்ளன.

நாளை மதியம்  பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கையளிக்கவுள்ளதாக எதிர்கட்சி தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.