மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் ஊழியர் உயிர்மாய்ப்பு

59 0

மன்னார் – வைத்தியசாலை வளாகத்தில் இளைஞரொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இன்று காலை தூக்கில் தொங்கியவாறு அவருடைய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மன்னார், வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் இளைஞரொருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இளைஞனின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை.

மேலும்,  நேற்றையதினம் இரவு  குறித்த நபர் இவ்வாறு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.