இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்ற வாதத்தை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியுள்ளார்.
தனியார் கல்லூரியில் மாணவர்கள் உடனான கலந்துரையாடலில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இவ்வாறு தெரிவித்தார். கல்லூரியில் நடைபெற்ற அரசியலமைப்பு தினக் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்று பேசிய ஆனந்த் வெங்கடேஷ், ” இன்னும் கூட ஜாதி என்னும் சாத்தான் நம் மண்டையில் இருந்து ஆட்டிப்படைத்து வருகிறது.
இடஒதுக்கீடு நம் நாட்டிற்கு தேவை. இங்கு அனைவரும் சமமாக ஆகும் வரை இடஒதுக்கீடு தொடரவேண்டும். இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்ற வாதத்தை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் நாடு வளரும். அதற்கு இடஒதுக்கீடு தேவை\” என்று தெரிவித்தார்.

