மனைவிக்கு உத்தியோகபூர்வ காரை வழங்கிய ஜனாதிபதியின் செயலாளர்

57 0

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க, தனது மனைவியின் சொந்த தேவைக்காக தனது உத்தியோகபூர்வ காரை ஓட்டுநருடன் பயன்படுத்தியதில் எந்த தவறும் இல்லை என பிரதி நீதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜனாதிபதியின் செயலாளரின் உத்தியோகபூர்வ கார் விபத்துக்குள்ளானது.

இதனால் அவரது உத்தியோகபூர்வ கார் சொந்த தேவைக்காக பயன்படுத்தப்பட்டதாக சுனில் வட்டகல விளக்கமளித்துள்ளார்.எனவே, ஜனாதிபதியின் செயலாளரின் மீது எந்த தவறும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யார் தவறு செய்தாலும் அரசாங்கம், அவர்களது அந்தஸ்தை பொருட்படுத்தாமல் தண்டனை வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.