புங்குடுதீவில் மர்மமாக கரையொதுங்கிய படகு!

68 0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் (09) இரவு 7.00 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.

ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில் , சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து படகு தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.