இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியர்களுக்காகப் போரிட்ட வீரர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இது திருகோணமலைக்கு வடக்கே நிலாவெளி, புல்மோட்டைக்கு செல்லும் வீதியில் சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
364 வீரர்களின் அஸ்தி அங்கு புதைக்கப்பட்டுள்ளது, இது ஏப்ரல் 1948ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
இதன் உரிமையானது கொமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பராமரிப்பு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது.
இதனை பல வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு வருகின்றனர்.


