இது குறித்து செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் காசா நகரத்தை கைப்பற்றுவதற்கான திட்டம் குறித்தும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஐந்து அம்ச திட்டம் குறித்தும் தெரிவித்துள்ளது.
காசா நகரை கைப்பற்றுவதற்கான திட்டத்தினை இஸ்ரேலிய இராணுவத்தினர் முன்னெடுப்பார்கள் அதேவேளை மோதல் இடம்பெறும் பகுதிக்கு வெளியே உள்ள மக்களிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஐந்து கொள்கைகளை இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் முன்வைத்துள்ளது.
ஹமாசிடமிருந்து ஆயுதங்களை களைதல்,உயிருடன் உள்ள உயிரிழந்த அனைத்து பணயக்கைதிகளையும் மீட்டுக்கொண்டுவருதல், காசா பள்ளத்தாக்கின் பாதுகாப்பை இஸ்ரேலிய படையினர் பொறுப்பேற்றல்,பாலஸ்தீன அதிகாரசபை அல்லது ஹமாஸ் இல்லாத மாற்று பாலஸ்தீன அரசாங்கத்தை அமைத்தல் ஆகியவை குறித்து இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

