கொழும்பு, பொரள்ளை துப்பாக்கிச் சூடு

42 0

கொழும்பு, பொரள்ளை சகஸ்ரபுர பகுதியில் சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை (07) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஐந்து இளைஞர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இவ்வாறு காயமடைந்த ஐவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் களனி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்,, கொழும்பு 9 ஐச் சேர்ந்த 21, 22 மற்றும் 23 வயதுடைய நான்கு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.