கொழும்பு – கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் ஆவார்.
கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காணாமல்போனமை தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிச் செல்லும் காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளன.
சந்தேக நபரான பொலிஸ் சார்ஜென்டிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், திருடப்பட்ட துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் மாவத்தகம பகுதியில் உள்ள நபர் ஒருவரிடம் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான பொலிஸ் சார்ஜென்ட் கொம்பனி வீதி பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

