சுப்ரீம்சாட் தொடர்பு செயற்கைக்கோள் திட்டம் குறித்து பிரதமர் வௌியிட்ட தகவல்

52 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் ரோஹித ராஜபக்ஷவின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘சுப்ரீம்சாட் தொடர்பு செயற்கைக்கோள் திட்டத்திற்கு’ இலங்கை அரசாங்கம் எந்தப் பணத்தையும் செலவிடவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

குறித்த திட்டத்திலிருந்து இலங்கைக்கு பல ஆயிரம் மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக பிரதமர் இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.